அவர் மீது எனக்கு ‘கிரஷ்’ இருந்தது- நடிகை அர்ஷா சாந்தினி பைஜு | I had a ‘crush’ on him

சென்னை,
மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் அர்ஷா சாந்தினி பைஜு. சமீபத்தில் வெளியான ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படத்தில் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தமிழ் சினிமா அனுபவம் குறித்து அர்ஷா சாந்தினி பைஜு அளித்த பேட்டியில், ‘மலையாளத்தில் பல படங்களில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசையோடு காத்துக் கொண்டிருந்தேன். எனது ஆசை ஹவுஸ்மேட்ஸ் படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது.
திறமைக்கு மதிப்பளிப்பவர்கள் தமிழ்நாடு மக்கள். நிச்சயம் தமிழ் சினிமாவில் எனக்கான இடத்தை பிடிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மலையாள சினிமாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் பெரிய வித்தியாசமோ வேறுபாடோ இல்லை. தமிழ் சினிமா மிகப் பெரிய துறை, மிகப் பெரிய படங்கள் இங்கு எடுக்கப்படுகிறது. நயன்தாரா உள்பட பல நடிகைகள் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையான உயரத்தில் இருக்கிறார்கள்.
எனவே தமிழ் சினிமா மீது எனக்கு மிகப் பெரிய காதல் உண்டு. தமிழ் சினிமாவில் அனைவருடனும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. சிவகார்த்திகேயனின் டைமிங் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் கல்லூரியில் படிக்கும் போது சூர்யாவின் தீவிர ரசிகை. அவர் மீது எனக்கு ‘கிரஷ்’ இருந்தது. அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.