”கூலி” படத்தை பார்த்த லதா ரஜினிகாந்த்?… சொன்ன விஷயத்தால் இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்|Lata Rajinikanth who saw the movie “Coolie”?

சென்னை,
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ”கூலி” படம் நாளை மறுநாள் உலகளவில் வெளியாக இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், எங்கும் ”கூலி” படம் பற்றிய பேச்சாகவே உள்ளது.
இதற்கிடையில், சமீபத்தில் கூலி படத்தை லதா ரஜினிகாந்த் பார்த்ததாகவும், பார்த்துவிட்டு ரஜினியின் டாப் படங்களில் கூலியும் ஒன்றாக இருக்கும் என சொன்னதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லதா ரஜினிகாந்த் பொதுவாகவே ரஜினியின் படங்களை ரிலீசுக்கு முன்பே பார்த்துவிடுவார். அதேபோல கூலியையும் அவர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தை போன்று கூலியும் ஒரு அதிரடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ”எல்சியு”-ல் இல்லை என்று லோகேஷ் கூறி இருந்தாலும் படத்தில் பல சர்ப்ரைஸ் விஷயங்களை அவர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.
இப்படம் டிக்கெட் முன்பதிவிலேயே ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இது ரஜினியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.