சிறகடிக்க ஆசை: வீட்டை விட்டு துரத்தப்படுகிறாரா க்ரிஷ்.. முத்து, மனோஜ் இடையே சண்டை..

சிறகடிக்க ஆசை
ரோகிணியின் மகன் க்ரிஷ் தற்போது முத்து மீனவுடன் வீட்டில் இருக்கிறார். க்ரிஷ் வீட்டில் இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும், மனோஜ் மற்றும் விஜயாவிற்கு பிடிக்கவில்லை.
இதனால் க்ரிஷ் எப்போது வீட்டிலிருந்து வெளியேறுவான் என காத்திருந்தனர். க்ரிஷ் பாட்டி வந்து அவனை அழைத்து சென்றுவிடுவார் என எதிர்பார்த்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பாட்டியை திடீரென காணவில்லை.
துரத்தப்படுகிறாரா க்ரிஷ்
இதனால் க்ரிஷ் நம்ம வீட்டிலேயே இருக்கட்டும் என முத்து மீனா முடிவு செய்கின்றனர். ஆனால், விஜயா மற்றும் மனோஜ் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மனோஜ் முத்து இடையே சண்டை வெடிக்கிறது.
இந்த நிலையில், க்ரிஷ் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் யார்யார், இருக்க கூடாது என நினைப்பவர்கள் யார்யார் என ஓட்டெடுப்பு நடக்கிறது. இதில் க்ரிஷ் வீட்டிலிருந்து துரத்தப்படுவாரா? இல்லையா? பொறுத்திருந்து பார்ப்போம்.