நடிகர் தர்ஷனின் ‘டெவில்’ படம் பற்றிய புதிய அறிவிப்பு

பெங்களூரு,
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்தி கொன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ளார். கொலை நடந்த சமயத்தில் அவர் டெவில் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அதன்பிறகு கொலை வழக்கில் கைதானதால் அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அவர் ஜாமீனில் வந்தது முதல் டெவில் படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. டப்பிங் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் டெவில் படம் பற்றி படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதி அன்று இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. அந்த பாட்டு, இத்ரே நிம்மதியா இரு பேக்கு (இருந்தால் நிம்மதியாக இருக்க வேண்டும்) என்ற வரியுடன் உருவாகியுள்ளது. இதனால் தர்ஷனின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு ஜாமீனை ரத்து செய்ய கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.