நடிகர் அபிநய் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்து உதவிய தனுஷ்

சென்னை,
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர், அபினய். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களிலும் நடித்தார். விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் வில்லனுக்கு இவர்தான் குரல் கொடுத்திருந்தார். ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போக, வருமானத்துக்கு கஷ்டப்பட்டார்.
சமீப காலமாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் அபினய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்தார். இதற்கிடையில் சின்னத்திரை நடிகர் பாலா, அபினய்யை அவரது வீட்டில் சந்தித்து ரூ.1 லட்சம் நிதியுதவியாக வழங்கினார். அப்போது அபிநய் கண்கலங்கி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
எலும்பும், தோலுமாய் இருக்கும் நடிக்கும் அபிநய்க்கு திரையிலகினர் உதவ முன்வர வேண்டும் என்று ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் தனுஷ் அபிநய்க்கு மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.