நாசமாக போகட்டும்; ரஜினியை வைத்து கோடி கோடியாக சம்பாதிப்பது யார்? சீறிய சீமான்!

நாசமாக போகட்டும்; ரஜினியை வைத்து கோடி கோடியாக சம்பாதிப்பது யார்? சீறிய சீமான்!


ரஜினியை வைத்து கோடி கோடியாக திமுக சம்பாதிப்பதாக சீமான் சாடியுள்ளார்.

சீமான்



நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பற்றியும் அவரது கட்சி பற்றியும் பல ஆடியோக்கள் லீக் ஆகி விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

seeman with rajinikanth



இதுகுறித்து பேசியுள்ள சீமான், “எங்கள் கட்சிக்குள் உள்ள பொறுப்பாளர்களுக்குப் பேசிக் கொள்கின்ற அந்தரங்கமான விசயங்களை வெளியில் எடுத்துப் போடுவதால் என்ன பலன்? அதனால் பெட்ரோல் விலை குறையப் போகிறதா? அல்லது விலைவாசி குறையப் போகிறதா?

எங்கள் கட்சி விசயம் சார்ந்த உரையாடலை வெளியிடுவதால் மக்களுக்கு என்ன பயன்? ஆனால், அந்த அசிங்கமான வேலையை திமுக செய்கிறது.

ரஜினிகாந்த் சந்திப்புக்குப் பிறகு பலரும் நமச்சிவாயம் வாழ்க என்று சொல்வதைவிடச் சீமான் நாசமாகப் போகட்டும் என்று சொல்லிவிட்டுத்தான் பலரும் படுக்கிறார்கள்.

ரஜினியுடன் சந்திப்பு

காலையில் எழுகிறார்கள். என்னை சங்கி என்கிறார்கள். கிறிஸ்துவர் என்றார்கள்.

தமிழ்நாட்டில் ரஜினியைச் சந்திக்காதவர்கள் அரசியல்வாதி யார் இருக்கிறார்கள்? கருணாநிதியுடன் கூடவே ரஜினி இருந்திருக்கிறார். கருணாநிதி விழாவில் கமலும் ரஜினி பக்கத்துப் பக்கத்தில் உட்கார்ந்து இருந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

நாசமாக போகட்டும்; ரஜினியை வைத்து கோடி கோடியாக சம்பாதிப்பது யார்? சீறிய சீமான்! | Seeman Attacks Dmk Made A Film With Rajini

ஸ்டாலின் விழாவில்கூட ரஜினி பங்கேற்கிறார். வருடத்திற்கு 2 படங்களை வைத்து தயாரித்து கோடிகோடியாக சம்பாதிக்கிறது திமுக குடும்பம். பாஜகவும் கூட்டணியே வைத்துள்ளார்கள்.

மோடியை உதயநிதி ஸ்டாலின் உட்படப் பலரும் சந்தித்து இருக்கிறார்கள். என்னைப் பல முறை மோடியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தி அழைத்த போதுகூட மறுத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *