யோகிபாபு நடிக்கும் ‘சன்னிதானம் பி.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை,
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது இயக்குனர் அமுத சாரதி இயக்கத்தில் ‘சன்னிதானம் பி.ஓ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படம், யோகி பாபுவை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு செல்வதாகக் கூறப்படுகிறது. இதில் யோகி பாபுவுடன் இணைந்து ரூபேஷ் ரெட்டி, சித்தாரா, கஜராஜ், மேனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தினை மது ராவ்,விவேகநாந்தன் மற்றும் சபிர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படம் கிராமத்து பின்னணியை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், யோகி பாபு நடித்துவரும் ‘சன்னிதானம் பி.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.