குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிய நடிகை வரலட்சுமி…குவியும் பாராட்டு

சென்னை,
தமிழ் , தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது தனது கணவருடன் விடுமுறையை கொண்டாடி வரும் வரலட்சுமி, சமீபத்தில் தனது முதல் திருமண ஆண்டை பிரமாண்டமாக கொண்டாடினார்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி , எச்எச்எச் குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழித்த அனுபவத்தைப் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.
தனது கணவருடன் சேர்ந்து அங்கு சென்றிருந்த அவர், குழந்தைளுடன் தரமான நேரத்தைச் செலவிட்டதாகவும், மறக்க முடியாத நினைவுகளாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த சிறிய உதவியைச் செய்வதன் மூலம் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் வரலட்சுமியையும் அவரது கணவர் நிகோலாயையும் பாராட்டி வருகின்றனர்.