'கூலி' படத்தில் கேமியோ ரோலில் வருகிறாரா சிவகார்த்திகேயன்?

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக உருவாகி உள்ள கூலி திரைப்படம் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் டிக்கெட் விற்பனையில் மட்டும் 50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், இப்படம் தொடர்பான சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, சிவகார்த்திகேயன் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், சிவகார்த்திகேயன் கூலி படத்தில் நடிக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ரஜினி நடிப்பில் பேண்டஸி ஜானரில் படம் இயக்க திட்டமிட்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த கதையில் தான் எஸ்கே கேமியோ ரோலில் நடிக்க இருந்தாராம். அதே நேரம் கூலியில் அவர் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.