நான் உண்மையாக இருந்ததால் இழந்து விட்டேன் – மனம் திறந்த ஜிவி பிரகாஷ்

நான் உண்மையாக இருந்ததால் இழந்து விட்டேன் – மனம் திறந்த ஜிவி பிரகாஷ்


நான் பொய் சொல்ல நினைக்கல உண்மையாகதான் இருந்தேன் என ஜி.வி.பிரகாஷ் பேசியுள்ளார்.



ஜிவி பிரகாஷ்




தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளி தோழியும் பிரபல பாடகியுமான சைந்தவியை ஜிவி பிரகாஷ் திருமணம் செய்தார். 

gvprakash



ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி பாடிய பாடல்கள் பலவும் தமிழ் சினிமாவில் செம ஹிட் ஆனது. இவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கடந்த மே மாதம் இந்த தம்பதிகள் பிரிந்து வாழ போவதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினர். 



காதல் படம்



இந்நிலையில் சில நாட்களுக்கு முன், மலேசியாவில் நடந்த இசை கச்சேரி ஒன்றில் இருவரும் இணைந்து மயக்கம் என்ன திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பிறை தேடும் இரவிலே’ என்ற பாடலை பாடினர். கடந்த சில நாட்களாகவே இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

gvprakash saindhavi live concert



தற்போது, ஜிவி பிரகாஷ் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பேசிய அவர், காதல் படத்திற்கு நான்தான் முதலில் இசையமைக்க வேண்டி இருந்தது. பாலாஜி சக்திவேல் சார் என்னைப் பார்த்து, ‘நீங்கள் கஷ்டப்பட்டு எப்படியாவது மேலே வந்துவிட நினைக்கிறீர்களா’ என கேட்டார்.



உண்மையாக இருந்தேன்



அதற்கு நான் அப்படியெல்லாம் இல்லை சார். எனக்கு மியூசிக்ல தேடல் இருக்கு. உங்களுக்கு பிடிச்சிருந்தா கூப்பிடுங்கனு சொன்னேன். அவர் அதுக்கு அப்செட் ஆகிவிட்டார். அப்புறம் யோசிச்சேன் ஆமாம்னு சொல்லிருக்கலாமோனு. 



ஆனால் நான் உண்மையாகதான் இருந்தேன். பொய் சொல்ல நினைக்கல. என்ன பண்றது. அதற்கு பிறகு வசந்த பாலன் கிட்ட ‘உண்மையாகவே வெயில் படத்திற்கு இவன்தான் இசையமைத்தானா?’ என பாலாஜி சக்திவேல் சார் கேட்டிருக்கிறார்” என்று கூறினார்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *