எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க நடிகை கனிஹா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஈஸ்வரியின் தழுத்தை நெறுக்கி, சுவற்றில் இடித்து குணசேகரன் தாக்கியதால் ஈஸ்வரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.
ஈஸ்வரி நிலைமைக்கு குணசேகரன் தான் காரணம் என்பதை வீடியோ ஆதாரத்துடன் அறிவுக்கரசி தெரிந்துகொண்டார்.
இன்னொரு பக்கம் குணசேகரன், ஈஸ்வரி நிலைமைக்கு நீ தான் காரணம் என ஜனனி மீது பழி போடுகிறார்.
இப்படி பரபரப்பின் உச்சமாக தொடர் ஒளிபரப்பாகி வர சீரியலில் இருந்து ஒரு முன்னணி நடிகை வெளியேறிவிட்டார்.
நடிகை கனிஹா
ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்ற கனிஹா தற்போது தொடரில் இருந்து விலகிவிட்டார்.
இது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்க கனிஹா வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அவர் ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் வரை சம்பளம் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.