பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி… சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல், விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர்.
இன்றைய எபிசோட் கதையில் க்ரிஷ் தனது பாட்டியுடன் வீட்டிற்கு செல்ல கிளம்புகிறான். அப்போது மனோஜ், விஜயாவை தவிர மற்ற அனைவரும் க்ரிஷை சந்தோஷமாக வழி அனுப்பி வைக்கிறார்கள்.
பின் மருத்துவமனை வந்த முத்து-மீனா, க்ரிஷ் பாட்டியை காணவில்லை என தேடுகிறார்கள்.
க்ரிஷை வீட்டிற்கு மீனா அழைத்து வர விஜயா வழக்கம் போல் அவர்களை திட்டி பேசுகிறார்.
இன்னொரு பக்கம் முத்து, க்ரிஷ் பாட்டி எப்போது, எப்படி சென்றார் என விசாரிக்கிறார்.
புரொமோ
பின் நாளைய எபிசோட் புரொமோவில், முத்து க்ரிஷிடம் அவரது பாட்டி குறித்து கேட்கிறார்.
உனது அம்மா போன் நம்பர் இருக்கிறதா என முத்து க்ரிஷிடம் கேட்க அவன் இல்லை என்கிறான். உடனே மீனா பள்ளியில் கண்டிப்பாக க்ரிஷ் அம்மா விவரம் இருக்கும் என கூற ரோஹினி ஷாக் ஆகிறார்.