இனி அரை மணி நேரம் இல்லை.. விஜய் டிவி முக்கிய தொடர்களின் நேரம் மாற்றம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, தங்கமகள் ஆகிய சீரியல்கள் கடந்த வாரத்தோடு முடிக்கப்பட்டது.
அதனால் தற்போது இந்த வாரத்தில் இருந்து மற்ற சீரியல்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இனி 45 நிமிடம்
இதற்கு முன் அரை மணி நேர எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் அய்யனார் துணை ஆகிய சீரியல்கள் இனி 45 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
7.30 முதல் 8.15 வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் 8.15 முதல் 9 வரை அய்யனார் துணை ஆகிய சீரியல்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தனம் சீரியல் இனி 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் விஜய் டிவி ப்ரோமோ வெளியிட்டு அறிவித்து உள்ளது.