நாடு கடத்தப்படும் ஆபத்தில் ஆசிய நாடொன்றின் 18,000 மக்கள்

நாடு கடத்தப்படும் ஆபத்தில் ஆசிய நாடொன்றின் 18,000 மக்கள்


ஜனவரி 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் நிலையில் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் ஏற்கனவே அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

90,000 இந்தியர்கள்

அமெரிக்க அதிகாரிகள் குழு தயாரித்துள்ள பட்டியலில் 1.45 மில்லியன் பேர்கள் நாடு கடத்தப்படும் சிக்கலில் உள்ளனர். இதில் எந்த ஆவணங்களும் இல்லாத 18,000 இந்தியர்களும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்படும் ஆபத்தில் ஆசிய நாடொன்றின் 18,000 மக்கள் | Indians Face Deportation Risk As Trump Vows

கடந்த 3 ஆண்டுகளில் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற சுமார் 90,000 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாகாணங்களில் இருந்து வந்தவர்கள் என்றே டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், பல ஆவணமற்ற இந்தியர்களுக்கு, அவர்களின் அந்தஸ்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான நடவடிக்கைகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் வரும் நாடு இந்தியா அல்ல என்றே சமீபத்திய தரவுகளில் இருந்து தெரிய வருகிறது. ஹொண்டுராஸ், குவாத்தமாலா போன்ற அமெரிக்காவின் எல்லையில் உள்ள நாடுகளில் முறையே 261,000 மற்றும் 253,000 ஆவணமற்ற நபர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

ஒத்துழைக்காத நாடுகளில்

ஆசியாவில், 37,908 ஆவணமற்ற நபர்களுடன் சீனா முன் வரிசையிலும், 17,940 நபர்களுடன் இந்தியா 13வது இடத்திலும் உள்ளது. எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடுமையான குடியேற்றக் கொள்கைகளின் இந்த முழு அணுகுமுறையிலும், நாடு கடத்தும் செயல்பாட்டில் இந்தியா ஒத்துழைக்காத நாடுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்படும் ஆபத்தில் ஆசிய நாடொன்றின் 18,000 மக்கள் | Indians Face Deportation Risk As Trump Vows

இந்தப் பட்டியலில் பூட்டான், கியூபா, ஈரான், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒத்துழைப்பின்மை தூதரக உறவுகளில் மேலும் ஒரு சவாலை ஏற்படுத்தலாம் என்றே அஞ்சபப்டுகிறது.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் செயல்முறையை மேற்கொள்ள டிரம்ப் உறுதியளித்துள்ளதால், நாடு கடத்துவதற்கான இறுதி உத்தரவுகளுடன் ஆவணமற்ற ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *