தகாத உறவில் உல்லாசம்; கேள்வி கேட்ட மாமியார் – மிறள வைத்த மருமகள்

தகாத உறவில் உல்லாசம்; கேள்வி கேட்ட மாமியார் – மிறள வைத்த மருமகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை மருமகள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு



திருக்கழுக்குன்றம், நெரும்பூரைச் சேர்ந்தவர் லட்சுமி50. கணவர் இறந்த நிலையில், மகன் ராஜசேகருடன் வசித்து வந்துள்ளார்.

லட்சுமி - அமுல் - சரவணன்



லட்சுமி தனக்கு உடல்நிலை சரியில்லையென, வேறு ஊரில் வசிக்கும் மகள் சுகந்தியிடம், செல்போனில் தெரிவித்துள்ளார்.

உடனே சுகந்தியின் கணவர் குமார் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற மாட்டுக்கொட்டகையில், லட்சுமி துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.



இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், லட்சுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

மாமியார் படுகொலை 


இந்நிலையில், ராஜசேகரின் மனைவி அமுல் 38, அவரது தோழி பாரதி, இவ்விருவரின் கள்ளக்காதலனான, அதே ஊரைச் சேர்ந்த சரவணன் 40, ஆகியோர், கிராம நிர்வாக அலுவலர் மகேஷிடம் சரணடைந்தனர். தொடர்ந்து போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தகாத உறவில் உல்லாசம்; கேள்வி கேட்ட மாமியார் - மிறள வைத்த மருமகள் | Daughter In Law Killed Mother In Law Affair



தொடர் விசாரணையில் அமுலுக்கும், சரவணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளனர். இதையறிந்த மாமியார் லட்சுமி, அவரை கண்டித்துள்ளார்.


இதனால், சரவணனுடன் சேர்ந்து அவர்கள் லட்சுமியின் கழுத்தை நெரித்து கொன்று, தற்கொலை செய்தது போல் நாடகமாடியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *