இயக்குனர் அவதாரம் எடுத்த ”சுபம்” நடிகை|Subham actress turns director

சென்னை,
தேசிய விருது பெற்ற ”கலர் போட்டோ” படத்தை தயாரித்த அம்ருதா புரொடக்சன்ஸ், தனது புதிய படத்தை அறிவித்துள்ளது.
இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இப்படத்தை ஷாலினி கொண்டேபுடி இயக்குகிறார். சமீபத்தில் சமந்தாவின் ”சுபம்” படத்திலும், அதற்கு முன்பு ”மை டியர் டோங்கா” படத்திலும் ஷாலினி நடித்திருந்தார். தற்போது அம்ருதா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் 5-வது தயாரிப்பின் மூலம் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
இதை தவிர படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. வரும் நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.