என் கார் எங்க போச்சு.. நடிகை காஜல் அகர்வால் ஷாப்பிங் சென்றபோது என்ன நடந்தது பாருங்க

நடிகை காஜல் அகர்வால் ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்தவர். திருமணத்திற்க்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த அவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
காஜல் அகர்வால் தமிழில் இந்தியன் 2 படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அவரது காட்சிகள் படத்தில் எதுவும் இடம்பெறவில்லை. இந்தியன் 3 ஷூட்டிங் நடந்தால் அதில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
என் கார் எங்கே?
காஜல் அகர்வால் அவரது சகோதரி உடன் ஷாப்பிங் சென்று வெளியில் வந்தபோது அவர்களை போட்டோகிராபர்கள் சுற்றி போட்டோ எடுக்க தொடங்கினர். அவர் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருந்த நிலையில் போட்டோ எடுக்க வேண்டாம் என சொல்வார் என எல்லோரும் நினைத்தார்கள்.
தொடர்ந்து நடந்து சென்று காஜல் தனது கார் எங்கே என தெரியாமல் விழித்தார். அப்போது பத்திரிகையாளர்களை பார்த்து அவர் ‘என் கார் எங்க இருக்குனு உங்களுக்கு தெரியும்ல’ என கேட்க, அவர்களும் ‘அந்த பக்கம் இருக்கிறது’ என சொல்கிறார்கள்.
அந்த வீடியோ இதோ.