Weapons திரை விமர்சனம்

Weapons
ஹாலிவுட்டில் திரில்லர் படங்களுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அப்படி ட்ரைலரிலேயே மிரட்டிய வெப்பன்ஸ் படம் திரைப்படமாகவும் மிரட்டியதா, பார்ப்போம்.
கதைக்களம்
ஒரு பள்ளியில் ஜெஸ்டின் என்ற ஆசிரியை இருக்கிறார், அவர் க்ளாஸில் இருக்கும் குழந்தைகள் திடீரென நடு இரவு 2.17 மணி போல் எழுந்து கை நீட்டிக்கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடுகின்றனர்.
அதை தொடர்ந்து அவர்கள் காணாமல் போகிறார்கள், அந்த க்ளாஸில் இருக்கும் 17 மாணவர்களும் காணமல் போல, அலேக்ஸ் என்ற ஒரு மாணவன் மட்டும் இருக்கிறான்.
அந்த ஆசிரியை ஒரு சூனியகாரி, அவள் தான் இதற்கு காரணம் என எல்லா பெற்றோரும் குற்றம் சாட்ட, அந்த ஆசிரியையும் இது எதனால் நடந்தது என தேட, பல மர்மங்களுடம் ஒவ்வொருத்தர் பார்வையில் என்ன நடந்தது என்ற திகில் பயணமே இந்த வெப்பன்ஸ் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
கதை ஜெஸ்டின், ஆர்ச்சர், பால், ஜேம்ஸ், மார்கஸ், அலேக்ஸ் என்று ஒவ்வொருவரின் பார்வையில் கதை நகர்கிறது. இதில் காணாமல் போன க்ளாஸ் டீச்சர் ஜெஸ்டின்-ல் இருந்து பயணம் தொடர்கிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே செம திகிலுக்குள் நம்மை தள்கின்றனர்.
அடுத்தடுத்து இந்த குழந்தைகள் எங்கே போனார்கள் என்ற தேடல், ஜெஸ்டின் தொடங்கி அது தொலைந்த ஒரு குழந்தையின் அப்பா ஆர்ச்சர், டீச்சர் ஜெஸ்டின் முன்னாள் காதலன் பால்(போலிஸ்), பால் துரத்தி செல்லும் ஜேம்ஸ், பிறகு அந்த பள்ளி ப்ரின்ஸ்பால் மார்கஸ், கடைசியில் அந்த க்ளாஸில் தொலையாமல் இருக்குன் அலேக்ஸ் வருவது இயக்குனர் ஜாக் திரைக்கதையில் செம சுவாரஸ்யம் கூட்டியுள்ளார்.
அதோடு படம் பேய் படமா இல்லை சைக்கோ படமா என்ற ஒரு வகையான டுவிஸ்ட் நம்மை சில மணி நேரம் யோசிக்க வைக்கிறது, அதுவரை படத்தின் ஒவ்வொரு காட்சியும் திகில் தான்.
ஆனால், விஷயம் தெரிந்தவுடன், திகில் இல்லை என்றாலும் ஒரு பதட்டம் இருந்துக்கொண்டே இருக்கிறது, அதுவே இப்படத்தின் வெற்றி.
நடிகர், நடிகைகள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர், அதிலும் டீச்சர் ஜெஸ்டின், மாணவன் அலெக்ஸ் பிரமாதம்.
டெக்னிக்கலாக படம் மிக வலுவாக உள்ளது, இசை, ஒளிப்பதிவு, சவுண்ட் எபெக்ட் என அனைத்தும் மிரட்டல்.
ஆனால், 18 மாணவர்களில் 17 பேர் காணாமல் போக மீதமிருக்கும் அலெக்ஸ் மீது தான் எல்லோரின் கவனமுன் சென்றிருக்க வேண்டாம், ஆனால் போலிஸோ துளியும் அதை கண்டுக்கொள்ளவில்லை என்பது என்ன லாஜிக்கோ, அதையும் டீச்சர் ஜெஸ்டின் தான் கண்டுபுடிக்கிறார்.
இப்படம் ஹிந்தியில் வெளியாகி செம ஹிட் அடித்த ஒரு படத்தின் சாயல் ஹெவியாக உள்ளது, அதை சொன்னால் ஸ்பாயிலர் ஆகிவிடும், சிறிய ஹிண்ட் மாதவன் நடித்த படம்.
க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை.
டெக்னிக்கல் விஷயங்கள்
கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை, பல முறை ஒரு வீடு சந்தேகம் வந்தும் போலிஸார் அதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது.
மொத்தத்தில் இந்த வெப்பன்ஸ் ஹாரர், திரில்லர் ரசிகர்களுக்கு செம விருந்து.