ஆந்திரா மதுபான ஊழல், விசாரணையில் நடிகை தமன்னா.. என்ன ஆனது?

ஆந்திரா மதுபான ஊழல், விசாரணையில் நடிகை தமன்னா.. என்ன ஆனது?


தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.

தற்போது இவர் அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்து இயக்கி வரும் ‘வ்வான்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆந்திரா மதுபான ஊழல், விசாரணையில் நடிகை தமன்னா.. என்ன ஆனது? | Tamannaah Under Investigation Details

என்ன ஆனது? 

இந்நிலையில், தற்போது ஆந்திரா மதுபான ஊழல் மோசடி விவகாரத்தில் நடிகை தமன்னாவின் பெயர் அடிபட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில் கைதானவர்களில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேஷ் நாயுடு ஆகியோர் முக்கியமானவர்கள்.

இந்த மோசடி பணத்தின் மூலம் நடிகை தமன்னா நடத்தி வரும் ‛ஒயிட் அண்ட் கோல்டு’ கம்பெனி கிட்டத்தட்ட 300 கிலோ தங்கம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தமன்னா வெங்கடேஷ் நாயுடு உடன் தனி விமானத்தில் இருக்கும் போட்டோ வெளியாகி சந்தேகத்தை எழுப்ப அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திரா மதுபான ஊழல், விசாரணையில் நடிகை தமன்னா.. என்ன ஆனது? | Tamannaah Under Investigation Details  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *