அனிருத்துடன் பேடல் விளையாடிய தோனி

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம். ரஜினி மட்டும் இல்லாமல் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஆமிர் கான் என திரை பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும், நடிகை பூஜா ஹெக்டே மோனிகா என்ற பாடலுக்கு இசை அமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் 171வது படம் இதுவாகும். இது மட்டும் இல்லாமல், அவரது 50வது ஆண்டு திரைப்பயணத்தில் வெளியாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கூலி படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. இந்நிலையில், ‘முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி கூட செம கூலாக பெடல் விளையாடிக் கொண்டு இருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அனிருத் செம ஜாலியாக பெடல் விளையாடுவதை பார்த்தால் கூலி படத்தில் தனது வேலைகள் அனைத்தையும் அவர் முடித்துவிட்டார் போலத் தெரிகிறதே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதேபோல், தல தோனியுடன் இவர் இருப்பதால், இவர் ராஞ்சிக்குப் போனாரா? அல்லது அவர் சென்னைக்கு வந்துள்ளாரா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.