சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்… 2025 இல் கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசியினர்

சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்… 2025 இல் கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசியினர்

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் தான் சுக்கிரன்.

சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு ஆகியவற்றின் அதிபதியாக திகழ்கின்றார். 

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய ராசியில் சுக்கிரம் உச்சம் பெற்றால் சகல விதமான சுகங்களையும் பெற்று ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது.

சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்... 2025 இல் கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To Venus Transit

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பின் அடிப்படையில் சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக உருவாகும் மாளவ்ய யோகம் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப் போகின்றது.

இப்படி சுக்கிரனால் 2025 இல் ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ரிஷபம்

சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்... 2025 இல் கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To Venus Transit

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே பணத்துக்கு பஞ்சமின்றி ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள்.

2025 ஆம் ஆண்டில் உருவாகவுள்ள மாளவ்ய யோகத்தின் முழுப் பலன்களையும் இவர்கள் பெறப்போகிறார்கள்.

தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உருவாகும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வை அடுத்த ஆண்டில் இவர்கள் நிச்சயம் எதிர்ப்பார்க்கலாம்.

பல்வேறு வழிகளிலும் வருமானம் அதிகரிக்க கூடிய யோகம் அமையும். நீண்ட நாள் கனவுகள் நனவாக ஆரம்பிக்கும். 

துலாம்

சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்... 2025 இல் கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To Venus Transit

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு மாளவ்ய யோகம் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் செல்வாக்கு வாழ்வில் பாரிய மாற்றங்களை கொடுக்கப்போகின்றது.

2025 ஆம் ஆண்டு முழுவதுமே இவர்களுக்கு பணவரவு மிகவும் சீராக இருக்கும். சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் கூடிவரும். 

தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை பொருத்தவரையில் மகிழ்ச்சியளிக்க கூடியதாக இருக்கும்.திருமண வாழ்வில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி இணக்கமான சூழல் உருவாகும். 

மகரம்

சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்... 2025 இல் கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசியினர் | 3 Zodiac Get Lucky Due To Venus Transit

மகர ராசியினருக்கு இந்த மாளவ்ய ராஜயோகத்தால் அதிகாரம் மிக்க உயர்ந்த பதவியில் அமரக்கூடிய வாய்ப்பு அமையும். 

தொழில் மற்றும் நிதி ரீதியில் அருசு வளர்ச்சியை கொடுக்கக்கூடிய ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமையும்.

கடந்த காலங்களில் செய்த முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும். பணவியத்தில் எதிர்பாத அளவுக்கு வளர்ச்சி ஏற்படும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *