தமிழர்கள் எதிர்ப்பு.. கிங்டம் பட தயாரிப்பாளர் வருத்தம் தெரிவித்து அறிக்கை

விஜய் தேவரகொண்டா நடித்து இருக்கும் கிங்டம் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்த நிலையில் அதில் ஈழ தமிழர்களை மோசமாக சித்தரித்து இருப்பதாக சர்ச்சை எழுந்து இருக்கிறது.
படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ததற்கு நாம் தமிழர் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது.
தயாரிப்பாளர் வருத்தம்
இந்நிலையில் கிங்டம் படத்தை தயாரித்த சித்தாரா என்டர்ன்மென்ட்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
இந்த கதை முற்றிலும் கற்பனையானது என படத்தின் மறுப்புப் பகுதியில் (disclaimer) குறிப்பிட்டுள்ளோம். இதையும் மீறி மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால் அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.