I was approached to play the villain in the film “Parasakthi” – Lokesh Kanagaraj | “பராசக்தி” படத்தில் வில்லனாக நடிக்க என்னை அணுகினார்கள்

I was approached to play the villain in the film “Parasakthi” – Lokesh Kanagaraj | “பராசக்தி” படத்தில் வில்லனாக நடிக்க என்னை அணுகினார்கள்


சென்னை,

‘மாநகரம்’ படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து ‘கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. தற்போது ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும், கைதி 2, ரோலக்ஸ், விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளார். இது தவிர தனது ஜிஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது. அதாவது, தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த புதிய படத்தை இயக்க உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் நாகார்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், “நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் என்னைத்தான் அணுகிறார்கள். கதையும் எனக்குப் பிடிதிருந்தது. எஸ்கேவும் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். ஆனால், கூலி படத்தின் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என அப்படத்தில் இணையவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *