எந்த உடை அணிந்தாலும் அதை பார்த்து கமெண்ட் அடிக்கிறார்கள்; கேப்ரில்லா ஆதங்கம்

சென்னை,
சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். தொடர்ந்து தனுசுடன் ‘3’ படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். மீண்டும் சின்னத்திரை தொடர்களில் நடித்துவரும் கேப்ரில்லா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“எல்லோரும் உடற்பயிற்சி நிலையத்துக்கு உடல் எடையை குறைக்கத்தான் போவார்கள். நான் உடல் எடையை அதிகரிக்க சென்றேன். குண்டாக வேண்டும் என்று ஒரு நாளைக்கு 10 இட்லி சாப்பிட்டு இருக்கிறேன்.
அதனால் ஓவர் குண்டாகி விட்டேன். இப்போது உடலை குறைத்து விட்டேன். நான் எந்த உடை அணிந்தாலும் அதை பார்த்து மற்றவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள். அனைவரின் பார்வையும் ஆபாசமாக மாறிவிட்டதால் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தேன்.” என்று கேப்ரில்லா ஆதங்கமாக பேசியுள்ளார்.