திரைத்துறையில் 33 ஆண்டுகள் நிறைவு: அஜித்திற்கு மனைவி ஷாலினி வாழ்த்து

சென்னை,
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி 33 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப்பிரலங்கள் என பலரும் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், திரைத்துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமாருக்கு அவரது மனைவி ஷாலினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை ஷாலினி அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “நீங்கள் உங்கள் தொழிலை மட்டும் உருவாக்கவில்லை. நீங்கள் மக்களை சுமந்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து எல்லாவற்றையும் அருமையாக செய்துள்ளீர்கள். உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. 33 வருடங்கள் முடிந்து விட்டது” என்று பதிவிட்டுள்ளார்.