பாடல் வரிகளில் குழப்பம் வந்தால் ‘சாட் ஜிபிடி’யிடம் வாங்கி முடித்துவிடுவேன்: அனிருத்

சென்னை,
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் திரையுலகிலும் தனக்கென இசை ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி இருப்பவர் அனிருத். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் அவரது இசையில் உருவாகியுள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியாகி டிரண்டிங்காக இருந்து வருகிறது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், இசையமைப்பாளராக அழுத்தம் இருந்தாலும் அதை நான் ரசிப்பேன். எனது குழுவில் மொத்தம் 8 பேர் இருக்கிறார்கள் நான் ஒவ்வொரு படைப்பையும் செய்வதற்கு முன்பு எல்லோரும் பாடல்கள் மற்றும் இசையை பற்றி ஒன்றாக அமர்ந்து விவாதிப்போம். ஒரு பாடல் உருவாக்கப்பட்ட உடன் அது ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் நிராகரித்து விட்டு புதிய ஒன்றை உருவாக்குவோம். அதுதான் எங்கள் பழக்கம். சில நேரங்களில் பாடலை எப்படி முடிப்பது என்பது பற்றி நமக்கு யோசனை இருக்காது.
சில சமயங்களில் பாடல்களின் வரிகள் பற்றி குழப்பம் வரும் கடைசி வரிகள் கிடைக்காத போது இருக்கிற வரிகளை சாட் ஜிபிடியிடம் கொடுத்து இன்னும் இரண்டு வரிகள் எழுத சொல்வேன். சாட் ஜி பி டி எனக்கு 10 வாய்ப்புகள் கொடுக்கும் அதில் இருந்து நான் ஒரு வரியை தேர்ந்தெடுத்து பாட்டை முடித்து விடுவேன். நான் சாட் ஜிபிடியில் பிரீமியம் மெம்பர்ஷிப் எடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.