கோபத்தில் சவால் விட்டு படம் எடுத்தேன்; இயக்குனர் பொன்முடி திருமலைசாமி

சென்னை,
“பையா, கருங்காலி, வி3” போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் பொன்முடி திருமலைசாமி. தற்போது ‘பிஎம்டபிள்யூ 1991’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். வில்வங்கா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு 22 விருதுகளை பெற்றுள்ளது.
இப்படம் உருவான விதம் குறித்து இயக்குனர் பொன்முடி திருமலைசாமி கூறுகையில், “நான் இயக்கிய ‘சோம பான ரூபசுந்தரம்’ படத்தில் விஷ்ணுபிரியன் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்தனர். சில காரணங்களால் அந்தப் படத்தை எடுக்க முடியாத அளவிற்கு பிரச்சினைகள் இருந்தது.
அப்போது என்னிடம் ஐஸ்வர்யா தத்தா அடுத்த படம் என்ன எடுக்கப் போகிறீர்கள் என கேட்டார். அதற்கு நான் கோபத்தில் ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் ஒரு படம் எடுக்கப் போகிறேன் என்று கூறினேன். இதைக் கேட்டு அவர் என் மீது மிகவும் கோபம் அடைந்தார். கோபத்தில் சொல்லிவிட்டோம் இதை சாதிக்க முடியுமா என்று நினைத்த போது தான் இந்த பி எம் டபிள்யூ 1991 கதை கிடைத்தது. சொல்லப்போனால் நடிகை ஐஸ்வர்யா தத்தாவிடம் விட்ட சவாலுக்காகவே இந்த படத்தை நான் உருவாக்கினேன்.” இவ்வாறு அவர் கூறினார்.