இது என்ன பென்ஷன் பணமா, அமைதியாக வாங்கிக்கொள்ள.. தேசிய விருது குழுவை தாக்கிய நடிகை ஊர்வசி

சமீபத்தில் 2023ம் வருடத்திற்கான 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஷாருக் கான் ஜவான் படத்திற்காக சிறந்த நடிகர் என விருது அறிவிக்கப்பட்டது. மேலும் 12th fail படத்திற்காக விக்ராந்த் மாஸேவுக்கும் சிறந்த நடிகர் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.
சிறந்த துணை நடிகை என்கிற பிரிவில் நடிகை ஊர்வசிக்கு உள்ளொழுக்கு என்ற படத்திற்காக விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.
காட்டமான கேள்வி
இந்நிலையில் நடிகை ஊர்வசி அளித்த பேட்டியில் தேசிய விருது குழுவை தாக்கி பேசி இருக்கிறார். “எதன் அடிப்படையில் துணை நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது. ஷாருக் கான் சிறந்த நடிகர் என்றால் அதை எதன் அடிப்படையில் மதிப்பிட்டார்கள்.”
“கிடைப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்க, இது ஒன்றும் ஓய்வூதியம் அல்ல” என நடிகை ஊர்வசி காட்டமாக கேட்டு இருக்கிறார்.