நடிகைகளிடம் வயது குறித்து பேசாதீர்கள் – மாளவிகா மோகனன் காட்டம், Don’t talk to actresses about their age

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மாளவிகா மோகனன், பிரபாஸ் ஜோடியாக ‘தி ராஜாசாப்’ படத்திலும், கார்த்தி ஜோடியாக ‘சர்தார்-2’ படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ‘ஹிருதயபூர்வம்’ படத்தில் நடிக்கிறார். 64 வயதுடைய மோகன்லாலுக்கு 32 வயதான மாளவிகா மோகனன் ஜோடியா? என்றெல்லாம் தொடர்ந்து விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த விமர்சனங்களுக்கு மாளவிகா மோகனன் பதிலடி கொடுத்துள்ளார். ”நடிகைகளிடம் வயது குறித்தோ, வயது வித்தியாசம் குறித்தோ முதலில் பேசவே கூடாது. எதையாவது பேசுவதை முதலில் நிறுத்துங்கள். சினிமாவில் திறமையை பார்க்க வேண்டுமே தவிர, அர்த்தமற்ற விஷயங்கள் குறித்து ஆராயக்கூடாது” என்று கொந்தளித்துள்ளார். மாளவிகா மோகனன் இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.