கணவர் போட்டோக்கள் நீக்கம்.. விவாகரத்தை உறுதி செய்த ஹன்சிகா மோத்வானி?

நடிகை ஹன்சிகா கடந்த 2022 டிசம்பர் 4ம் தேதி சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற்றது.
திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கூட ஆகாத நிலையில் இருவரும் தற்போது பிரிந்துவிட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
போட்டோக்கள் நீக்கம்
ஹன்சிகா தனது கணவர் உடன் இருக்கும் போட்டோக்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார்.
அதனால் ஹன்சிகா விவாகரத்து உறுதி தான் என சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. ஹன்சிகா இந்த விஷயம் பற்றி தொடர்ந்து மௌனமாக இருப்பதும் செய்தியை உறுதிப்படுத்துகிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.