Urvashi Slams 71st National Film Award Jury For Awarding Her In Supporting Category | எந்த அடிப்படையில் தேசிய விருது வழங்கப்படுகிறது?

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன. அந்தவகையில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. 2023 -ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உள்ளொழுக்கு’ சிறந்த மலையாள படமாக தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற மலையாள மொழி படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு சிறந்த திரைப்பட இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 71-வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பில் ஜூரிக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். ஷாருக்கானுக்கு எந்த அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது என்றும், விஜயராகவன் எப்படி துணை நடிகரானார் என்றும் ஊர்வசி கேள்வி எழுப்பினார். விஜயராகவனுக்கு சிறப்பு விருது கொடுத்திருக்கலாமே என்றும், அவரது சினிமா அனுபவத்தை விருது தேர்வுகுழு ஆராய்ந்ததா என்றும் ஊர்வசி சரமாரியான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
” ‘உள்ளொழுக்கு’ படத்துக்காக எனக்கும்,’பூக்காலம்’ படத்துக்காக நடிகர் விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகை, நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டன. எங்கள் இருவருக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை?
‘பூக்காலம்’படத்தில் விஜயராகவனுக்கு ஜோடியாக நடிக்க இருந்தது நான். காலையில் மேக்கப் போட ஐந்து மணி நேரம், அதை நீக்க நான்கு மணி நேரம். நீங்கள் எவ்வளவு கோடி கொடுத்தாலும் என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவள் நான். அதையெல்லாம் தியாகம் செய்து விஜயராகவன் நடித்தார். அதற்கு ஒரு சிறப்பு விருது கொடுத்திருக்கலாமே? அவர் துணை நடிகராக ஆனது? எதன் அடிப்படையில் எப்படி என்பதுதான் நான் கேட்பது. ஒரு நியாயம் இருக்கிறதல்லவா.
நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம். வரி செலுத்துகிறோம். அரசு தருவதை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என சொல்வது சரியல்ல, அரசு வழங்கும் விருதை ஓய்வூதியமாக கருத முடியாது” என்று ஊர்வசி கூறியுள்ளார்.
90-களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஊர்வசி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது ஊர்வசி சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை ஊர்வசி மற்றும் பார்வதி திருவோது ஆகியோர் இணைந்து ‘உள்ளொழுக்கு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். கிறிஸ்டோ டாமி இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.