ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா

நடிகர்கள் இடையில் எப்போதும் போட்டி இருப்பது வழக்கமான ஒன்று தான். அதிலும் யார் நம்பர் 1 என தொடர்ந்து போட்டி இருந்துகொண்டே தான் இருக்கும்.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான் ஹீரோவின் மார்க்கெட் நிலை என்பதை காட்டுகிறது. அப்படி இந்திய அளவில் பல ஹீரோக்கள் முன்னணியில் இருக்கிறார்கள். ரஜினி, விஜய், பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஷாருக் கான் என பல ஹீரோக்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி தற்போது ஒரு ஹீரோ ஒரே நேரத்தில் 5000 கோடி ரூபாய் பட்ஜெட் இருக்கும் படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரியுமா.
ரன்பீர் கபூர்
அனிமல் படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ரன்பீர் கபூர் மார்க்கெட் உச்சத்தை தொட்டு இருக்கிறது. தற்போது அவர் தான் 5000 கோடி பட்ஜெட்டில் படங்கள் நடித்து வருகிறார்.
நிதிஷ் திவாரி இயக்கத்தில் அவர் நடிக்கும் ராமாயணம் படம் சுமார் 4300 கோடியில் எடுக்கப்படுகிறதாம். மேலும் அனிமல் படத்தில் அடுத்த பாகம் உள்ளிட்ட மேலும் சில படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன.
அதனால் சைலண்டாக ரன்பீர் தான் தற்போது இந்தியாவில் டாப் ஹீரோவாகா வளர்ந்து இருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பேச்சு இருந்து வருகிறது.