முகப்பரு வரும் போதெல்லாம் இதைதான் செய்வேன் – தமன்னா கொடுத்த டிப்ஸ் | This is what I do whenever I get acne

தென்னிந்திய திரை உலகில் மட்டுமின்றி இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. சில வருடங்களாக தனி பாடலுக்கு நடனமாடி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை அவருக்காக உருவாக்கியுள்ளார். ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவலா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த தமன்னா பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் பிசியாக பல படங்களை நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில் முகப்பருக்கள் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:- “என் முகத்தில் முகப்பரு வரும் போதெல்லாம் வேறு எந்த சிகிச்சையையும் நான் எடுத்துக் கொள்வதில்லை. அவ்வப்போது பருக்கள் மீது எச்சில் வைப்பேன். இது எனக்கு பயனுள்ளதாக அமைந்து பருக்கள் குணமாகிவிடும்.” இவ்வாறு அவர் கூறினார்.