பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! – 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை

பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! – 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை


நடிகர் அஜித் குமார் சினிமா துறையில் அறிமுகம் ஆகி 33 வருடங்கள் நிறைவு பெற்று இருப்பதை ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு நன்றி கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

“சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்த பயணத்திற்காக முழுமனதுடன் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.”

“இந்த பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முக்குமா என் சுய முயற்சியால் மட்டுமே சினிமா துறைக்குள் நுழைந்தேன். காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால் நான் தளர்ந்து போகவில்லை, முயற்சி செய்தேன், மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன்!”

“ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக்கொள்ளவில்லை. அதை பரிசோதித்தது அவ்வண்ணமே வாழ்த்து கொண்டு இருக்கிறேன்.”

“எண்ணில் அடங்காகள் அளவுக்கு வெற்றியும் தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்பு தான் என்னை மீண்டு வர செய்துள்ளது. இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன். இந்த அன்பை எப்போதும் இருக்கப் பிடித்திருப்பேன். ஆனால் என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை.”

பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! - 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை | Ajith Kumar Statement On 33 Years In Cinema

சுயலாபதிற்காக பயன்படுத்தமாட்டேன்

“நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான். நன்றி! உங்கள் அன்பை என் சுயலாபதிற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த்த மாட்டேன்.”

“சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி, என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவிய அணைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள், விமர்சகர்கள் அனைவருக்கும் நன்றி!”

“நான் பல சமயங்களில் அதிகம் வெளியே வராமலும் பேசாமலும் இருக்கலாம். ஆனால் சினிமா மட்டுமல்ல மோட்டார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி உங்களை மகிழ்விக்க தவறியது இல்லை.”

“என் நிறை குறைகள் அனைத்தையும் இந்த 33 வருடங்கள் ஏற்றுக்கொண்டு என் மீது அன்பு வைத்து கொண்டாடியதற்கு நன்றி! உங்களுக்கு எனக்கு என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன். என் மோட்டார் ரேஸிங் கரியருக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. உங்களையும் நம் நாட்டையும் பெருமைப் படுத்துவேன் என நம்புகிறேன்.”

வாழு, வாழ விடு!

அஜித் குமார் 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *