”ராமராக நடிக்க மிகவும் பொருத்தமானவர் அவர்தான் ”

சென்னை,
ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் கிளீம் புரொடக்சன்ஸ் ஆகியவை ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்’-ன் கீழ் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் படங்களை தயாரிக்கின்றன.
அதன்படி தயாரிக்கப்பட்ட முதல் படமான மகாவதார் நரசிம்மா திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் அஸ்வின் குமார் தற்போது ரிலீஸுக்கு பிந்தைய புரமோஷன்களில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் ஒரு நேர்காணலின்போது அஸ்வின் குமாரிம் , ஸ்ரீ ராமராக நடிக்க எந்த ஹீரோவைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அது ராம் சரண்தான் என்று பதிலளித்தார்.