சமந்தா, தமன்னா, ஸ்ரீலீலா வரிசையில் தற்போது நயன்தாரா.. நடிகருடன் குத்தாட்டம்

சமந்தா, தமன்னா, ஸ்ரீலீலா வரிசையில் தற்போது நயன்தாரா.. நடிகருடன் குத்தாட்டம்
Nayanthara going to do special dance for song with prabhas in rajasaab movie

சிறப்பு பாடல்

முன்னணி நடிகைகள் மற்றும் சென்சேஷனலான நடிகைகள் சிறப்பு பாடலுக்கு நடனமாடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். புஷ்பா 1 படத்தில் சமந்தாவின் சிறப்பு நடனம் பரவலாக பேசப்பட்டது.அதே போல் ஜெயிலர் படத்தில் தமன்னா, சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா என இவர்களின் நடனம் வைரலானது.

குத்தாட்டம் போடப்போகும் நயன்தாரா

இந்த நிலையில், நடிகை நயன்தாராவும் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடமாடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் ஹாரர் கதைக்களத்தில் உருவாகி வரும் படம் ராஜாசாப். இப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு பிரபாஸ் உடன் இணைந்து நயன்தாரா நடமாடவிருக்கிறாராம்.ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. பிரபாஸ் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து யோகி எனும் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *