ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்

கலாபவன் நவாஸ்
மலையாள திரையுலகில் பிரபலமான மிமிக்ரி கலைஞரும் நடிகருமானவர் கலாபவன் நவாஸ். இவர் 1995 ஆம் ஆண்டு சைதன்யம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
பிரகம்பனம் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கலாபவன் நவாஸ் சோட்டாணிக்கராவில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார்.
படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், கலாபவன் நவாஸ் அறையை காலி செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக நவாஸ் ஹோட்டல் ஊழியரிடம் பெருத்து மற்றும் ரயில் நேரம் குறித்து விசாரித்துள்ளார்.
மரணம்
இதுகுறித்து நவாஸிடம் தெறிப்பதற்காக அந்த ஊழியர் அறைக்கு சென்றபோது, அங்கு நடிகர் நவாஸ் மயக்கமடைந்து, சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார்.
இதன்பின் ஓட்டல் ஊழியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உயிரிழந்த நடிகர் நவாஸுக்கு வயது 51. அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.