யார் கண்ணுக்கும் தெரியாமல்.. அனிருத்திற்கு இருக்கும் வித்தியாசமான ஆசை

அனிருத்
தமிழ் சினிமா கொண்டாடும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். ஏ.ஆர்.ரகுமான் பள்ளியில் பயின்று இன்று இந்தியாவை தாண்டி கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளார்.
அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் யூடியூப் தளத்தில் வெளியான விரைவிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்று விடுகிறது.
தமிழில் கூலி, ஜனநாயகன், மதராஸி, லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 போன்ற படங்களும், தெலுங்கில் சில படங்களும் இவரது இசையமைப்பில் அடுத்து வெளியாக இருக்கிறது.
வித்தியாசமான ஆசை
இந்நிலையில், அனிருத் அவரது வித்தியாசமான ஆசை குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் யார் கண்ணுக்கும் தெரியாமல் போகும் வரம் கிடைத்தால் முதலில் பேருந்தில் பயணம் செய்வேன். பள்ளி நாட்களில் எப்படி பேருந்தின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பயணம் செய்தேனோ அப்படி பயணம் செய்ய விரும்புகிறேன்.
இதை இப்போது செய்ய முடியாததால் மிகவும் மிஸ் செய்கிறேன். வெளிநாட்டுக்கு சென்றால் என்னால் பேருந்தில் பயணம் செய்ய முடிகிறது. ஆனால், என்னோட நாட்டில் அப்படி பயணம் செய்ய முடியவில்லை” என தனது வித்தியாசமான ஆசை பற்றி கூறி இருக்கிறார்.