'ஜன நாயகன்' படத்தின் கதை இதுவா..? வெளியான தகவல்

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அரசியலில் குதித்துள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள், எதற்கெல்லாம் மயங்கக்கூடாது என்பது குறித்து விஜய் அறிவுறுத்துவது போன்ற காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளதாம். ஊழலை ஒழித்து, ஜனநாயகம் எப்படி இயங்கவேண்டும்? என்பதை சொல்லும் கதை தான் இது என்று கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.