வாத்தி படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்த தனுஷுக்கு நன்றி|Thank you Dhanush for choosing me for the film Vaathi.

சென்னை,
2023-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இவற்றில் வாத்தி திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
2-வது முறையாக தேசிய விருது பெறும் ஜி.வி.பிரகாஷ், தனக்கு கிடைத்த விருதுக்காக நன்றி. ரொம்ப சந்தோஷமாக உள்ளது. நான் எதிர்பாக்கவே இல்ல.. சர்ப்ரைஸ் ஆகிட்டேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவில்,
இரண்டாவது முறையாக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தேசிய விருது பயணத்துக்காக வாத்தி படக்குழுவினருக்கு எனது நன்றி.
வாத்தி படத்துக்காக என்னைத் தேர்ந்தெடுத்த சகோதரர் தனுஷுக்கு எனது மனமார்ந்த நன்றி. பொல்லாதவன் முதல் அசுரன், வாத்தி, இட்லி கடை வரையில் எங்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு, எங்கள் இருவருக்கும் ஆக்கப்பூர்வமாக பலனளித்து வருகிறது.என்னுடைய சிறந்த படைப்பை வழங்க, என்னை ஊக்கப்படுத்திய மற்றும் என்னை நம்பிய இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு ஒரு பெரிய நன்றி.என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் நாகவம்சி, திரிவிக்ரமுக்கு நன்றி.
எனது குடும்பத்தினர், இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அன்பு நண்பர்கள், என்னை ஆதரித்து நம்பிய எனது ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி என்று குறிப்பிட்டத்துடன், பிரபஞ்சத்துக்கும் நன்றி அதில் பதிவிட்டுள்ளார்.