71வது திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்

டெல்லி,
இந்தியாவின் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுக்கான போட்டியில் 332 படங்கள் இடம்பெற்றன.தமிழில் சிறந்த திரைப்படமாக பார்க்கிங் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹரிஷ், கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநராக ராம்குமார் பாலகிருஷ்ணன் பார்க்கிங் படத்தை இயக்கியிருந்தார்.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், சிறந்த இசையமைப்பாளராக ‘வாத்தி’ திரைப்படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷுக்கு வழங்கப்படுகிறது.