பெண் கூறிய பாலியல் புகார்.. நடிகர் விஜய் சேதுபதி கோபமாக கொடுத்த விளக்கம்

பெண் கூறிய பாலியல் புகார்.. நடிகர் விஜய் சேதுபதி கோபமாக கொடுத்த விளக்கம்


நடிகர் விஜய் சேதுபதி தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் பிரபலமான நடிகராக மாறி இருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த தலைவன் தலைவி படம் பெரிய ஹிட் ஆகி வசூலை குவித்து வருகிறது.

சமீபத்தில் X தளத்தில் ரம்யா மோகன் என்ற பெண் விஜய் சேதுபதி பற்றி பாலியல் புகார் கூறி பதிவிட்டு இருந்தார்.


“பெண் ஒருவருக்கு தனது கேரவனுக்கு வர விஜய் சேதுபதி 2 லட்சம் கொடுத்தார், உடன் driveக்கு வருவதற்கு 50 ஆயிரம் கொடுத்தார். பல வருடங்களாக விஜய் சேதுபதி பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் தற்போது மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார்” என ரம்யா மோகன் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவு வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதன் பின் அதை நீக்கிவிட்டார்.

பெண் கூறிய பாலியல் புகார்.. நடிகர் விஜய் சேதுபதி கோபமாக கொடுத்த விளக்கம் | Vijay Sethupathi Clarify Casting Couch Allegation

விஜய் சேதுபதி மறுப்பு

இந்நிலையில் இந்த பாலியல் புகார் பற்றி விஜய் சேதுபதி பேசி இருக்கிறார். குற்றச்சாட்டை மறுத்து இருக்கும் அவர், இந்த புகார் ஆதாரமற்றது, அசிங்கமான குற்றச்சாட்டு என கூறி இருக்கிறார்.

“என்னை பற்றி கொஞ்சமாக தெரிந்தவர்களுக்கு கூட இந்த புகார் உண்மைஇல்லை என தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள்.”

“தன்னை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காக அந்த பெண் இப்படி செய்திருக்கிறார். சில நிமிடங்கள் புகழ் அவருக்கு இதனால் கிடைக்கிறது.”

“இது பற்றி தற்போது சைபர் க்ரைமில் புகார் அளித்து இருக்கிறேன்” எனவும் விஜய் சேதுபதி தெரிவித்து இருக்கிறார். 

பெண் கூறிய பாலியல் புகார்.. நடிகர் விஜய் சேதுபதி கோபமாக கொடுத்த விளக்கம் | Vijay Sethupathi Clarify Casting Couch Allegation


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *