ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக பரவும் வைரல் வீடியோ

ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக பரவும் வைரல் வீடியோ


சென்னை,

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வைரலாகி வருகிறது. அதாவது, தலையில் நரைத்த முடி, அரை கால்சட்டை மற்றும் அரை கை பனியன் அணிந்த ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் நடந்து செல்லும் போது ஈரம் காரணமாக , வழுக்கி விழுகிறார். பின்னர் அவரே மீண்டும் நடக்கத் தொடங்குகிறார். அவர் ரஜினிகாந்த் தோற்றத்தில் இருப்பதால், வீடியோவில் உள்ளவர் ரஜினிகாந்த் என கருதினர். அந்த வீடியோவை பார்த்த சிலர், “கவனமாக இருங்கள், தலைவா” என்று பதிவிட்டனர்.

இந்நிலையில், இந்த வீடியோவில் இருப்பவர் ரஜினிகாந்த் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோவில் அந்த நபரின் முகம் தெளிவாகத் தெரியாததால் ஏற்பட்ட குழப்பம் என்றும், ரஜினிகாந்த் தற்போது நலமாக இருப்பதாகவும் படக்குழு சார்பிலும், ரஜினிகாந்த் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *