‘மோனிகா’ பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பூஜா ஹெக்டே சௌவின் ஷாஹிர் உடன் ஆட்டம் போட்டிருப்பார்.
அந்தப் பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த உடை பெரிய கவனத்தை பெற்றிருக்கிறது. இந்நிலையில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் விலை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி அந்த ஆடை ‘வெர்சேஸ் மெடுசா 95 டிராப்டு கவுன்’ வகையை சேர்ந்தது. அதன் விலை கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய் தெரிய வந்துள்ளது.