Vijay Devarakonda thanked Surya | சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா

Vijay Devarakonda thanked Surya | சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த விஜய் தேவரகொண்டா


தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் ‘கிங்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கிங்டம்’ திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் புரோமோஷன் பணிகளுக்காகப் படக்குழுவினர் சென்னை வந்தனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, ‘ஜெர்சி’ பட இயக்குநர் கெளதம் டின்னனுரி இயக்கியிருக்கிறார். படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய விஜய் தேவரகொண்டா, “தமிழ் மக்களுக்கு வணக்கம். உங்களுடைய அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். இப்படத்தின் இயக்குநர் கெளதமின் ‘ஜெர்சி’ திரைப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ‘கிங்டம்’ படத்தின் கதையை அவர் சொன்னதும், இதனை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பண்ண வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். இப்படத்தின் கதைக்களம் ஆந்திரா, சென்னை மற்றும் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளில் நடப்பதாக அமைத்திருக்கிறோம்.

‘கிங்டம்’ படத்தின் விளம்பரப் பணிகளுக்காக நான் இங்கு வந்திருக்கிறேன். நான் இந்த மேடையில் இரண்டு நபர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். முதலில் சூர்யா அண்ணாவுக்கு பெரிய நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். அவர்தான் ‘கிங்டம்’ படத்தின் டீசரை முதலில் தமிழில் வெளியிட்டார். சூர்யா அண்ணா இப்படத்தின் டீசருக்கு டப் செய்ய வேண்டும் என இயக்குநர் கெளதம் விரும்பினார். சூர்யா அண்ணாவுக்கு போன் செய்து, ‘அண்ணா, எனக்கு ஒரு உதவி மட்டும் தேவைப்படுகிறது. தயவு செய்து அதற்கு ‘நோ’ சொல்லாதீர்கள்,’ என்றேன். அவரும், ‘இல்லை, இல்லை, நீங்கள் என்ன விஷயம் என்பதைச் சொல்லுங்கள்,’ என்றார். பிறகு நான், ‘இப்படத்தை தமிழிலும் நான் வெளியிட விரும்புகிறேன். என்னுடைய இயக்குநர் உங்களுடைய குரல் இந்த டீசருக்கு வேண்டும் என விரும்புகிறார். அதைச் செய்து தர முடியுமா?’ என்றேன். ‘நிச்சயமாக, நான் செய்கிறேன்,’ என வந்து பேசிக் கொடுத்த சூர்யா அண்ணாவுக்கு நன்றிகள்! எனக்காக இதை நீங்கள் செய்ததில் மகிழ்ச்சி. அனிருத் படத்திற்கு ஒரு புதிய உயிர் கொடுத்திருக்கிறார்” என்றார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *