தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

தமிழில் இதுவரை வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள் என்ன என்பதை தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

கனா – 2018

பெண்கள் கிரிக்கெட்டில் உள்ள வலியையும், விவசாயியின் வறுமையையும் காட்டிய திரைப்படம் கனா. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்க ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், ரமா, இளவரசு, தர்ஷன், முனீஸ்காந்த் என பலரும் நடித்திருந்தனர். மேலும் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்து அசத்தியிருந்தார். திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

சென்னை 28 – 2007

இளைஞர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது, அவர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்காக என்ன செய்வார்கள் என்பதை மிகவும் யதார்த்தமாக சொன்ன திரைப்படம் சென்னை 28. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, சம்பத், நிதின் சத்யா, ஜெய், விஜயலட்சுமி என பலரும் நடித்துள்ளனர். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

இறுதி சுற்று – 2016

மாதவன் – இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தின் மூலம் ரித்திகா சிங் எனும் நடிகை அறிமுகமானார். இப்படத்தில் காளி வெங்கட், நாசர், சாகிர் ஹுசைன், ராதா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சந்தோஷ் நாராயணன், சஞ்சய் வாண்ட்ரேக்கர், அதுல் ராணிங்கா இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

சார்பட்டா பரம்பரை – 2021

பா. ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து துஷாரா விஜயன், ஜான் கோகென், ஷபீர், சஞ்சனா நடராஜன், பசுபதி, கலையரசன், அணுமப்பா குமார், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

ஜீவா – 2014

ஒரு இளைஞனின் கனவு, அந்த கனவுக்காக அவர் எவ்வளவு போராட்டங்களை, வலிகளை மற்றும் இழப்புகளை சந்தித்தான் என்பதே ஜீவா படம். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் ஸ்ரீதிவ்யா, மதுசூதன் ராவ், சூரி, லக்ஷ்மன் நாராயணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

வெண்ணிலா கபடி குழு – 2009

விஷ்ணு விஷால் எனும் நடிகர் தமிழ் சினிமாவிற்கு கிடைக்க காரணமாக இருந்த திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூரி, கிஷோர், சரண்யா மோகன், அப்புக்குட்டி, நிதிஷ் என பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு செல்வகணேஷ் என்பவர் இசையமைத்திருந்தார்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

தோனி – 2012

நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்குநராக அவதாரம் எடுத்து இயக்கிய முதல் தமிழ் திரைப்படம் தோனி. இப்படத்தில் ஆகாஷ் பூரி கதையின் நாயகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். மேலும் ராதிகா அப்டே, பிரம்மானந்தா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

பிகில் – 2019

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த இப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் விஜய். அவருடன் இணைந்து விவேக், நயன்தாரா, யோகி பாபு, ஆனந்த்ராஜ், கதிர், இந்துஜா, அமிர்தா, வர்ஷா, ரெபா மோனிகா என பலரும் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

கில்லி – 2004

மாஸ் ஆக்ஷன் ஸ்போர்ட்ஸ் திரைப்படம் என்றால் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது கில்லி மட்டும்தான். இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, பிரகாஷ்ராஜ் , ஆஷிஷ் வித்யார்த், தாமு, ஜானகி சபேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

எதிர்நீச்சல் – 2013

சிவகார்த்திகேயனின் கரியர் பெஸ்ட் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று எதிர்நீச்சல். தனுஷ் தயாரிப்பில், அனிருத் இசையில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து, சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு சினிமாவில் நகர்த்தியது. இப்படத்தில் ப்ரியா ஆனந்த், சதீஸ், நிவேதிதா தாமஸ், ஜெயபிரகாஷ் என பலரும் நடித்திருந்தனர்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

கட்டா குஸ்தி – 2022

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படத்தில் ரெடின் கிங்கிலி, கருணாஸ், கஜராஜ், காளி வெங்கட், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

லப்பர் பந்து – 2024

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்து வெளிவந்த படம் லப்பர் பந்து. இப்படத்திற்கு பின் அட்டகத்தி தினேஷ் கெத்து தினேஷ் என அழைக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு இப்படத்தின் வெற்றி, அவருடைய அடையாளத்தையே மாற்றி அமைத்துள்ளது. மேலும் ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், தேவதர்ஷினி, காளி வெங்கட், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

ஈட்டி – 2015

அதர்வா, ஸ்ரீதிவ்யா இணைந்து நடிக்க இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் உருவான திரைப்படம் ஈட்டி. இப்படத்தில் அழகம் பெருமாள், ஆடுகளம் நரேன், ஜெய பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

தமிழில் வெளிவந்த சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Sports Movies In Tamil

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *