"என் மீது அவதூறு பரப்பவே மகன் மீது வழக்கு"- நடிகர் மன்சூர் அலிகான் வேதனை

சென்னை,
பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மீது அவதூறு பரபரப்புவதற்காகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்சூர் அலிகான் வேதனை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு, என்ன நடப்பது என தெரியாமல் வழக்கு பதிவு செய்ய சொல்வது நியாயமா?.விசாரணை மேற்கொள்ளாமல், எனது மகன் துக்ளக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, எனது மகனுடன் பழகிய அனைவருக்கும் தெரியும், அவன் எவ்வாறு பேசுவான் என்று.
காவல்துறை என் மகன் மீது பதிந்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.வழக்குப்பதிவு சம்பந்தமாக வடபழனிகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.
கஞ்சா அடித்தார் என தெரிந்தவுடன் எனது மகனை நானே அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன் தவறு செய்யும் பட்சத்தில் ஒரு தந்தையாக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன்” என்றார்.
மன்சூர் அலிகானின் மகன் முன்னதாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.