தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

சகுனி – 2012

சாமானியனின் கோரிக்கையை கேட்க மறுத்த முதலமைச்சரின் ஆட்சியை, அந்த சாமானியன் மாற்றி அமைத்ததால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையுடன் சீரியஸாக காட்டிய திரைப்படம் சகுனி. இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாள் இயக்க கார்த்தி, ப்ரணிதா சுபாஷ், சந்தானம், பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார் என மாபெரும் நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

கோ – 2011

இளைஞர்களின் படையால் தமிழக அரசியலை மாற்றி அமைக்கமுடியும் என்பதை, பத்திரிகையாளர் கண் வழியாக காட்டிய திரைப்படம் கோ. மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய இப்படத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா பாஜ்பாய், பிரகாஷ் ராஜ், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் என பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

முதல்வன் – 1999

தமிழ் சினிமாவில் அரசியல் திரைப்படம் கதைக்களத்தில் வெளிவந்த படங்கள் பற்றி சொல்லுங்கள் என யாரவது கேட்டால், உடனடியாக நினைவுக்கு வருவது முதல்வன் ஆகத்தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இப்படத்தை, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு, விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

மக்கள் ஆட்சி – 1995

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகி 1995ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மக்கள் ஆட்சி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தேவயானி, ரோஜா, ஆனந்த்ராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். 

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

இருவர் – 1997

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி 1997ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இருவர். தமிழ்நாட்டின் அரசியலில் மாபெரும் சாதனைகள் செய்த புரட்சி தலைவர் எம்.ஜி. ராமசந்திரன் மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படம், இன்று வரை கல்ட் க்ளாசிக் திரைப்படமாக உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க ரேவதி, தபு, கவுதமி, ஐஸ்வர்யா ராய் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை மையமாக நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

எல்.கே.ஜி – 2019

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்த எல்.கே.ஜி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. நகைச்சுவை உடன் கலந்து கருத்து பேசிய இப்படத்தில் பிரியா ஆனந்த், ஜெ.கே. ரித்தீஷ், நாஞ்சில் சம்பத், ராம்குமார், தம்பி ராமையா ஆகியோர் நடித்திருந்தனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

தலைவி – 2021

தமிழக அரசியலின் மாபெரும் ஆளுமை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தலைவி. இப்படத்தை இயக்குநர் விஜய் இயக்கியிருந்தார். இப்படத்தில் அரவிந்த் சாமி, சமுத்திரக்கனி, நாசர், மதுபாலா என பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார், சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா ஆகியோர் இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

அமைதிப்படை – 1994

சிறந்த அரசியல் Satire திரைப்படம் என்றால் அது ‘அமைதிப்படை’தான். மணிவண்ணன் இயக்கி நடித்த இப்படத்தில் கதாநாயகனாக சத்யராஜ் நடித்திருந்தார். கஸ்தூரி, ரஞ்சிதா, மீசை முருகேசன், சுஜிதா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

சர்கார் – 2018

தளபதி விஜய் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த படம் சர்கார். இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க வரலக்ஷ்மி சரத்குமார் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். கீர்த்தி சுரேஷ், பழ. கருப்பையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

என்.கே.ஜி – 2019

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் இப்படி ஒரு படமா என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பாலா சிங் ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

ஆயுத எழுத்து – 2004

மணி ரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன் மற்றும் சித்தார்த் இணைந்து நடிக்க வெளிவந்த திரைப்படம் ஆயுத எழுத்து. இப்படத்தில் த்ரிஷா, மீரா ஜாஸ்மின், ஈஷா தியோல், பாரதிராஜா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

கோடியில் ஒருவன் – 2021

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். ஆத்மிகா, திவ்யா பிரபா, கருடா ராம் ஆகியோர் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

கொடி – 2016

தனுஷ் டபுள் ஆக்ஷனில் அரசியல் கதைக்களத்தில் நடித்து 2016ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கொடி. இப்படத்தை இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்க த்ரிஷா வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் அனுபமா பரமேஸ்வரன், காளி வெங்கட், சரண்யா பொன்வண்ணன், எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த அரசியல் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | Best Political Movies In Tamil

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *