சினிமாவிற்கு வந்தது ஏன்? நடிகர் விஜய் சேதுபதி

சினிமாவிற்கு வந்தது ஏன்? நடிகர் விஜய் சேதுபதி


சென்னை,

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகர். தமிழையும் தாண்டி பல மொழிகளில் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்து இருக்கின்றார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் எந்த ரோலாக இருந்தாலும் அதனை திறம்பட செய்து அசத்துபவர் தான் இவர். ஆனால் இனி ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்ற முடிவிற்கு விஜய் சேதுபதி வந்திருக்கின்றார் என்றே கூறப்படுகிறது. இடையில் பல படங்களில் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்திலும் நடித்து வந்த விஜய் சேதுபதி இனி ஹீரோவாக மட்டுமே தான் நடிப்பதாக முடிவெடுத்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என முடிவெடுத்த பிறகு அவரது நடிப்பில் வெளியான மகாராஜா மற்றும் தலைவன் தலைவி ஆகிய படங்கள் வசூலில் சாதனை செய்து வருகின்றன.

இந்த நிலையில், தனியார் டிவி சேனல் ஒன்று நடத்திய நேர்காணலில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:-

நான் எல்லா வேலைகளையும் செய்து பார்த்தேன். எதுவும் சரியாகக் கைகூடவில்லை. துபாயில் வேலை செய்துகொண்டிருந்தபோது அதிக சம்பளம் கிடைக்கும் என ஆப்கானிஸ்தான் செல்ல முயற்சித்தேன். பின், சென்னை வந்து சில வேலைகளைச் செய்தேன்.

பின், சினிமாவுக்குப் சென்றால் நல்ல வருமானம் கிடைக்கும் என நடிப்பைக் கற்றுக்கொள்ள கூத்துப்பட்டறை சென்றேன். ஆனால், அங்கு கணக்காளர் பணிதான் கிடைத்தது. அங்கிருந்தே சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மாதம் ரூ. 1 லட்சம் சம்பாத்தித்தால் போதும் என்கிற ஆசையால்தான் சினிமாவுக்கு வந்தேன் என்று கூறினார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *