வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்துகொள்ள மாட்டேன், ஆனால்.. நித்யா மேனன் ஷாக்கிங் முடிவு

வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்துகொள்ள மாட்டேன், ஆனால்.. நித்யா மேனன் ஷாக்கிங் முடிவு


நித்யா மேனன்

சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். இதன்பின் வெப்பம், காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, மெர்சல், திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

தற்போது, தனுஷுடன் இணைந்து இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தலைவன் தலைவி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை அதாவது 25 – ம் தேதி வெளியாக உள்ளது.

வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்துகொள்ள மாட்டேன், ஆனால்.. நித்யா மேனன் ஷாக்கிங் முடிவு | Nithya Menen Open Talk About Her Marriage

ஷாக்கிங் முடிவு 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” ஒரு வயது வந்ததும் எனக்கும் காதல் அனுபவம் கிடைத்தது. ஒவ்வொரு அனுபவமும் வலியையே தந்தது. எத்தனை முறை காதல் உறவில் விழுந்தேனோ, அத்தனை முறை என் இதயம் உடைந்து போனது.

வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்துகொள்ள மாட்டேன், ஆனால்.. நித்யா மேனன் ஷாக்கிங் முடிவு | Nithya Menen Open Talk About Her Marriage

ஒரு அழகான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருந்தன. ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் எனக்குக் கிடைக்கவே இல்லை. வாழ்நாள் முழுவதும் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று எந்த நிபந்தனையுடனும் நான் வாழவில்லை.

ஆத்ம துணை கிடைத்தால் நாளை கூட திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் இப்போது எனக்கு இருக்கும் தனிமை வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.        


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *